/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் கட்டக் கோரி ஊராட்சி ஒன்றியத்தில் போராட்டம்
/
வாறுகால் கட்டக் கோரி ஊராட்சி ஒன்றியத்தில் போராட்டம்
வாறுகால் கட்டக் கோரி ஊராட்சி ஒன்றியத்தில் போராட்டம்
வாறுகால் கட்டக் கோரி ஊராட்சி ஒன்றியத்தில் போராட்டம்
ADDED : பிப் 14, 2025 06:25 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வாறுகால் கட்டக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராமத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துார் அருகே கணபதி சுந்தரநாச்சியார் புரம் ஊராட்சி நந்தவனத் தெருவில் வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கி பணிகளின் போது கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் முடங்கின.
தற்போது வரை கழிவுநீர் வெளியேற்ற வழி இன்றி வீடுகளுக்கு முன் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதுடன் தொற்று நோய் அபாயம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அப்ப பகுதி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தபோது அதிகாரிகள் இல்லாததால் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., வராத காரணத்தால் அலுவலக மேலாளரிடம் மனுவை கொடுத்து கலைந்து சென்றனர்.