ADDED : ஆக 27, 2026 06:53 PM
சிவகாசி, ஆக. 28 -
சிவகாசி வணிகவரித்துறை அலுவலகம் முன்பு சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் டாப்ஸ் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கிடவும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை பொருளாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார். வணிகவரித்துறை பணியாளர் சங்கம் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார்.
*சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் சிவகாசி தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கம் மாவட்ட பொருளாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி பேசினார். வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சிவகாசி கிளை நிர்வாகி கார்த்தி நன்றி கூறினார்.
