/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தால் தொடருது நெரிசல்
/
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தால் தொடருது நெரிசல்
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தால் தொடருது நெரிசல்
பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தால் தொடருது நெரிசல்
ADDED : ஏப் 24, 2025 06:42 AM

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பகல் நேரங்களில் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் அனுமதிப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
விருதுநகரில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டல்சந்திப்பு முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.  பஸ்கள்சென்று வருவதற்கு அது ஒன்று தான் வழி.
கட்சியினர் கூட்டம் அதிகரித்ததால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். போக்குவரத்து நெரிசலால் பஸ்கள் திரும்ப முடியாமல் திண்டாடினர். வழக்கமாக இது போன்ற நேரங்களில் தேசப்பந்து மைதானத்தில் தான் அனுமதி அளிப்பர். ஆனால் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி அளித்திருந்தது வித்தியாசமான நடைமுறையாக இருந்தது.
அதேபோல் தேசப்பந்துமைதானத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து விட்டன. பலர் வியாபாரிகள் என்ற போர்வையில் ஆக்கிரமித்து, வேறு நபர்களுக்கு தரை வாடகைக்கு விடுகின்றனர். இதனால் தேசப்பந்து மைதானத்தில் வாகனங்களைகூட நிறுத்த இடம் இல்லாத சூழல் உள்ளது.
நகரமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது போன்று விருதுநகர் மாறி வருகிறது. அதற்கு கூடுதல் சாட்சியாக பஸ்கள் சென்று வரும் வழித்தடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்து நெரிசல் ஏற்பட்டதே சிறந்த உதாரணமாக உள்ளது.
எனவே மக்கள் நலன் கருதி தேசப்பந்து மைதானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெரிய கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அங்கேயே நடத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகளில் பெரியளவில்நெரிசல் பாதிப்புகள் குறையும்.

