நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துாரில் தைப்பொங்கலை முன்னிட்டு காங். சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சட்டசபை தொகுதி பொறுப்பாளர் ஜோதி நிவாஸ் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் கார்த்திக் சுப்பையா முன்னிலை வகித்தனர். கூடுதல் தொகுதி பொறுப்பாளர் சுப்புராம் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் ரங்கசாமி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆஸ்கார் பிரடி பேசினர். தைப்பொங்கலை முன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்களுக்கு இலவச வேட்டி சேலை கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.