நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சி.ஐ.டி.யூ., கார் வேன் ஓட்டுனர்கள் சார்பில் உறுப்பினர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி தலைவர் பவித்ரா தலைமை வகித்தார். இதில் 10, பிளஸ் 2, அரசு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பாராட்டி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.