நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் தோட்டக்கலை துறை சார்பில் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலையில் 58 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 61 ஆயிரத்து 575 க்கான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டது.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ரூ. ஆறு லட்சத்திற்கான காய்கனி விற்பனை வண்டிகள் 40 பேருக்கு, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் ரூபாய்க்கான காய்கறி விதைகள் 8 பேருக்கு, ஊட்டச்சத்து வேளாண் இயக்கத்திட்டத்தின் கீழ் 5 பேருக்கு காய்கறி விதை தளைகள், மூவருக்கு பழக்கன்றுகள் தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தளைகள் 2 பேருக்கு வழங்கப்பட்டது. தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.