ADDED : ஜன 15, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேசம் காப்போம் சமூக நல அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ம.நீ.ம., நகர செயலாளர் கமல் கண்ணன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் காளிதாஸ், அறக்கட்டளை நிறுவனர் அண்ணாதுரை ஆகியோர் பெண்களுக்கு சேலைகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அக்கட்சி நிர்வாகிகள் பன்னீர், நல்ல தம்பி, கமல்குமார், பூமி ராஜ், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
