ADDED : பிப் 15, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர் தலைவர் கலசலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி செயலர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். .மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கி நகராட்சி தலைவர் ரவி கண்ணன் பேசினார்.
விழாவில் நகராட்சி துணைத் தலைவர் செல்வமணி, கல்விக்குழு தலைவர் காளிராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

