
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 10 பேர் பலியாகினர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணத்தொகை தலா ரூ.3 லட்சம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் இருந்து தலா ரூ. 2 லட்சம், ஈமச்சடங்கு செலவு ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.5.05 லட்சத்தை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் உதயநிதி, சாத்துார் ராமச்சந்திரன், கணேசன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன் ஆகியோர் வழங்கினர்.
கலெக்டர் ஜெயசீலன், எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, நகராட்சி தலைவர் மாதவன், மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

