ADDED : டிச 28, 2024 06:53 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது
ரூ.1.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் தொடர்ச்சியாக வீட்டுமனை பட்டா, காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் என்பது உங்கள் கையிலே கொடுக்கின்ற பணம்.
இந்த அட்டை இருக்கும் என்று சொன்னால் தனியார், அரசு மருத்துவமனையாக இருந்தாலும் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும். இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது என, பேசினார்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, தாசில்தார் செந்தில் வேல், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

