தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு காசோலை வழங்க இழுத்தடிப்பு! நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை

முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு காசோலை வழங்க இழுத்தடிப்பு! நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை

முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு காசோலை வழங்க இழுத்தடிப்பு! நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை


UPDATED : அக் 11, 2026 12:45 AM

ADDED : அக் 10, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:45 AM ADDED : அக் 10, 2026 04:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு காசோலை வழங்க

* நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் டெண்டர்கள் விடப்பட்டு முடிந்த வளர்ச்சி பணிகளுக்கும், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கும் காசோலை வழங்காமல் 'கவனிப்பை' எதிர்பார்த்து இழுத்தடிக்கின்றனர். இவ்விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கவனம் செலுத்த வேண்டுமென ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு அரசு துறைகளில் லஞ்சம் கொடி கட்டி பறந்தது. நியாயமான, சட்டபூர்வமான பணிகள் செய்யவோ, சான்றிதழ்கள் கொடுக்கவோ, இவ்வளவு தொகை வேண்டுமென மிரட்டும் வகையில் பல்வேறு அரசு துறைகளில் லஞ்சம் பெறப்பட்டது.

குறிப்பாக பத்திரப்பதிவு, டவுன் பிளானிங், பல்வேறு துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், மின் இணைப்பு வழங்குதல் , வகை மாற்றம் செய்தல் போன்ற பணிகளுக்கு இவ்வளவு தொகை என டார்கெட் வைத்து லஞ்சம் பெறுவதை ஒவ்வொரு ஊரிலும் காண முடிந்தது. இதற்காக ஒவ்வொரு துறையிலும் பல்வேறு தனி நபர்கள் புரோக்கர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் ஒரு காலகட்டத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரப்பூர்வமாக உட்கார்ந்து கொண்டு பேரம் பேசி லஞ்சம் பெற்றனர். தற்போதய த.வெ.க., அரசில் அடிக்கடி த திடீர் சோதனைகளால் லஞ்சம் வாங்குவதில் கரார் தன்மை இல்லாமல் உள்ளது.

இவர்கள் நிலை இவ்வாறு இருக்க, பல்வேறு அரசு துறைகளில் டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்து அதற்கான பணத்தை பெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தாலும் அதற்குரிய பணத்தை பெறுவதற்கு மாத கணக்கில் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதில் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பொருட்கள் கொள்முதல், அரசு விழாக்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் ஆய்வின் போது ஏற்படும் செலவினங்களுக்கான பில்களுக்கு பணம் வழங்குதல், முடிந்த பணிகளுக்கு காசோலை வழங்குதல், ஒப்பந்த வாகனங்களுக்கு மாதாந்திர செலவு பணம் வழங்குதல் உட்பட பல்வேறு வகைகளில் 'கவனித்தால்' மட்டுமே காசோலை வழங்கும் நிலை காணப்படுகிறது. . கொடுக்கவில்லை எனில் ஏதாவது காரணம் கூறி அலைய விடுகின்றனர்.

இதனால் முன்கூட்டியே முதல் போட்டு தொழில் செய்யும் ஒப்பந்ததாரர்கள், வியாபார நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் சிவகாசியில் ஒப்பந்த வாகனங்களுக்கு பணம் வழங்குவதில் லஞ்சம் வாங்கிய சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர் பிடிபட்டது ஒரு உதாரணம். இந்த நிலை அனைத்து அரசுத் துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று ஐந்து மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் பல்வேறு அரசு துறையில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது தொடர் கதையாகவே நீடிக்கிறது என்பதற்கு, கடந்த சில மாதங்களில் லஞ்சம் வாங்கி பிடிபட்ட அதிகாரிகளே உதாரணமாக திகழ்கிறார்கள்.

எனவே, மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் புரையோடி காணப்படும் லஞ்சத்தை, ஊழலை, கமிஷனை ஒழிக்க மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டுமென தொழில் செய்பவர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us