/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தள்ளு.. தள்ளு.. தள்ளு.. தள்ளியே ஸ்டார்ட் ஆன பஸ்
/
தள்ளு.. தள்ளு.. தள்ளு.. தள்ளியே ஸ்டார்ட் ஆன பஸ்
ADDED : பிப் 21, 2025 07:09 AM

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கோட்டூர் செல்லும் அரசு பஸ் ஸ்டார்ட் ஆகாத நிலையில் பயணிகளால் தள்ளிவிடப்பட்டு கிளம்பியது.
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் 3:00 மணி அளவில் கோட்டூர் செல்லும் அரசு பஸ்சை கிளப்புவதற்காக டிரைவர் ஏறினார். ஆனால் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கல்லுாரி, மாணவர்கள், பயணிகள் பஸ்சை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவினர். இதனைத் தொடர்ந்து பஸ் கிளம்பியது. பெண்களுக்கான இந்த சிறப்பு பஸ் செல்லும்போது நடுவழியில் நின்றிருந்தால் பெரிதும் சிரமப்பட்டிருப்பர். எனவே அரசு பஸ்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சரி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.