/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் தரம் ஆய்வு
/
சிவகாசி ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் தரம் ஆய்வு
சிவகாசி ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் தரம் ஆய்வு
சிவகாசி ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் தரம் ஆய்வு
ADDED : ஜூன் 05, 2025 12:49 AM
சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் சரவணன் ஆய்வு செய்தார்.
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024 ஆகஸ்ட் மாதம் பணிகள் தொடங்கி 17 துாண்கள் அமைக்கப்பட்டு, கிழக்கு பகுதியில் துாண்கள் இணைக்கப்பட்டு பாலம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ரயில்வே துறை சார்பில் தண்டவாளத்திற்கு மேல் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. மேற்கு பகுதியில் துாண்களை இணைக்கும் பணி நடக்கிறது.
மேம்பால கட்டுமான பணிகள் 70 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை இயக்குநர் சரவணன் கட்டுமான பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். துணை இயக்குநர் இளங்கோ, தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம், கோட்ட பொறியாளர்(சிறப்பு திட்டங்கள்) லிங்குசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.