ADDED : ஆக 29, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழின் பட்டம் இதழை மையப்படுத்தி வினாடி வினா போட்டி நடந்தது.
தலைமை ஆசிரியர் நாராயணசாமி தலைமை வகித்தார். மாணவர்களின் பொது அறிவு, வாசிப்புத்திறன், அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது. பட்டம் இதழில் இடம்பெற்றுள்ள செய்திகள் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் கேட்கப்பட்டன. ஆசிரியர்கள் வேல்முருகன், செல்வராஜ், லட்சுமணன், கற்பக ராஜா, முத்துக்குமார், மாரீஸ்வரி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
