ADDED : ஆக 29, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி: நரிக்குடி அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
திருச்சுழி பகுதியில் உள்ள கிரஷரில் இருந்து ராமநாதபுரம் பகுதியில் நடக்கும் ரோடு பணிகளுக்கு நேற்று காலை 4:00 மணிக்கு சிமென்ட் கலந்த ஜல்லி கற்களை ஏற்றி டிப்பர் லாரி சென்றது. உத்திரகோசமங்கை அருகே நல்லிருக்கையை சேர்ந்த கருணாமூர்த்தி 49, ஓட்டினார். அப்போது நரிக்குடியை அடுத்து விருப்பாட்சிநாதர் கோவில் அருகே வளைவில் சென்ற போது துாக்க கலக்கத்தில் ஓட்டியதால் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் கருணாமூர்த்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
