தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/''வளர்ச்சி பணிகள் செய்யவில்லை: ஓட்டு கேட்க அசிங்கமாக உள்ளது''

''வளர்ச்சி பணிகள் செய்யவில்லை: ஓட்டு கேட்க அசிங்கமாக உள்ளது''

''வளர்ச்சி பணிகள் செய்யவில்லை: ஓட்டு கேட்க அசிங்கமாக உள்ளது''


ADDED : பிப் 29, 2024 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை : ''வார்டில் எந்தவித வளர்ச்சிப் பணிகள் செய்யாமல் தேர்தலுக்கு வார்டு மக்களிடத்தில் ஓட்டு கேட்டுச் செல்ல அசிங்கமாக உள்ளது,'' என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசமாக பேசினார்.

அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார், துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள்


பாலசுப்பிரமணியன், (மார்க்சிஸ்ட்): நகர் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. நீர் நிலைகளும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்.

அசோக்குமார், கமிஷனர்: இன்னும் ஒரு மாதத்தில் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

ராமதிலகம், (அ.தி.மு.க.,): பட்டாபிராமர் கோயில் அருகில் புதிய கழிப்பறை கட்ட வேண்டும்.

செந்திவேல்,(தி.மு.க.,): நேதாஜி ரோடு பகுதியில் ரோடு தோண்டப்பட்டு மேடும் பள்ளமுமாக இருக்கிறது. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கண்ணன், (தி.மு.க.,): காந்தி நகர் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுங்கள். இது குறித்து பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

அப்துல்ரகுமான், (தி.மு.க.,): கவுன்சிலர் ஆகி 2 ஆண்டுகள் முடிந்து விட்டது. எனது வார்டில் எந்தவித வளர்ச்சி பணிகளும் செய்யவில்லை. எனது வார்டில் உள்ள ஒரு தெருவில் 11 ஆண்டுகளாக ரோடு மோசமாக உள்ளது. பல முறை கூறியும் இன்னும் போடப்படவில்லை. தேர்தலுக்கு வார்டு மக்களிடம் ஓட்டு கேட்க செல்ல அசிங்கமாக உள்ளது.

தனலட்சுமி, (ம.தி.மு.க): நகராட்சி பணியாளர்கள் வீட்டு வரி வசூலிக்க சென்றால் தெருக்களில் ரோட்டை போட்டுவிட்டு வரி வாங்கி செல்லுங்கள் என்கின்றனர். ரோடுகளை போட நடவடிக்கை எடுங்கள். இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

நகராட்சி கூட்டத்தில் விவாதத்தின் போது 6வது வார்டு கவுன்சிலரான தி.மு.க., வை சேர்ந்த மணிமுருகன், எஸ்.பி.கே., கல்லூரி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதாக தினமலர் நாளிதழை காட்டி பேசினார்.

தினமலர் நாளிதழை காட்டி விவாதம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us