ADDED : செப் 30, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி கால்நடை மருத்துவமனையில், உலக வெறி நாய்க்கடி நோய் தினத்தை முன்னிட்டு, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தியோபிலஸ் ரோஜர், உதவி இயக்குனர் டாக்டர் வெங்கடேசன் தலைமையில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது.
டாக்டர் முனியசெல்வம் 50க்கு மேற்பட்ட செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினார். இந்நோயின் தாக்கம், நாய் கடித்ததும் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆய்வாளர்கள் சத்தியா, ஜோதி உடனிருந்தனர்.

