/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிசம்பரில் துவங்க திட்டம்
/
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிசம்பரில் துவங்க திட்டம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிசம்பரில் துவங்க திட்டம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிசம்பரில் துவங்க திட்டம்
ADDED : நவ 25, 2025 03:00 AM
விருதுநகர்: தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாடு முழுவதும் டிசம்பரில் துவங்க கால்நடைத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கால்நடைகளை தாக்கும் நோய்கள் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை உண்டாகியுள்ளது. நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்கள் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான மருத்துவ சேவைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் மாடுகளுக்கு வாய், கால், மடியில் கொப்புளங்கள், கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைதல், தாயிடம் பால் குடிக்கும் கன்றுகள் இறப்பு, சினை மாடுகளில் கன்று வீசுதல், சினைப்பிடிக்காதிருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் பரவலாக காணப்படுகிறது.
இதனால் நோய்பரவலை கட்டுப்படுத்த அனைத்து அரசு கால்நடை மருத்துவனைகள், மருந்தகங்களில் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ உதவி தேவையான கால்நடைகளுக்கு மருந்துகள் செலுத்தப்படுகிறது.
மேலும் கோமாரி நோய் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் டிசம்பரில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பூசிகள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டவுடன் தேதி அறிவிக்கப்பட்டு துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

