/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயிலில் தெப்பத்தேரோட்டம்
/
ஆண்டாள் கோயிலில் தெப்பத்தேரோட்டம்
ADDED : பிப் 25, 2024 06:16 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மாசி மகத்தை முன்னிட்டு தெப்பத்தேரோட்டம் நேற்று துவங்கியது
இதையொட்டி நேற்று இரவு 7:00 மணிக்கு கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.
இரவு 8:15 மணிக்கு திருமுக்குளம் மைய மண்டபத்தை தேர் 3 முறை சுற்றி வந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர் ,அறங்காவலர்கள் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.
டி.எஸ்.பி.முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும், நாளையும் இரவு 7:00 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.