/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
/
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் திறப்பு
ADDED : நவ 12, 2025 12:13 AM

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரத்தில் ரூ.61.74 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
சிவகாசிநடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். மாணிக்கம் தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மேயர் சங்கீதா. துணைமேயர் விக்னேஷ் பிரியா, சப்கலெக்டர் முகமது இர்பான் முன்னிலை வகித்தனர். அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மேம்பாலத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர்கள் பேசியதாவது, மக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அதிக அளவில் பாலங்களை முதல்வர் ஸ்டாலின் அமைத்து வருகிறார்.
மக்களுக்கு பயனுடையதாக அமையக்கூடிய திட்டங்களை முதல்வர் கொண்டு வருகிறார். மேலும் மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றி வருகிறார்.
போக்குவரத்து இடையூறினால் பாதிக்கப்பட்ட சிவகாசி, திருத்தங்கல் மக்களுக்கு சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்கும் பொருட்டு சாட்சியாபுரம் மேம்பாலமும், திருத்தங்கல் மேம்பாலமும் அமைத்து தர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, இந்த சாட்சியாபுரம் பாலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மற்றுமொரு பெருமை திருத்தங்கல் பாலம் அமைக்க நமது அரசு அனுமதி வழங்கி, பணி நடைபெற ரூ.74 கோடி நிதி ஒதுக்கி, இதில் பாலப்பணிகளுக்கு மட்டும் ரூ.45 கோடி நிதியை வழங்கியுள்ளார் முதல்வர்.
திருத்தங்கல் பாலத்தினையும் விரைந்து துரித முறையில் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினர்.
நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறி யாளர்கள் ரமேஷ் முருகேசன், கோட்ட பொறியாளர்கள் லிங்குசாமி, பாக்கிய லட்சுமி, தி.மு.க., மாநகரச் செயலாளர் உதயசூரியன், சிவகாசி சட்டசபை தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பைபாஸ் வைரகுமார், தி.மு.க., காங்., கட்சியினர், அரசு அதிகாரிகள் மக்கள் கலந்து கொண்டனர்.
இனிப்பு வழங்கல்: தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் தலைவர் ஜெய்.சங்கர், செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் வினோத் கண்ணா, முன்னாள் தலைவர் தியாகராஜ், கவுரவ ஆலோசகர் காசிராஜன், துணைபொருளாளர் தனசேகரன் நிர்வாகிகள் சதீஷ், அண்ணாமலை ஆகியோர் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து சங்கம் சார்பில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
* பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் டூவீலரில் சென்று வந்தனர். மேல் சிவகாசி மக்கள் இதை திருவிழாவாக கொண்டாடினர்.

