ADDED : டிச 06, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: டிசம்பர் 6ஐ முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்வே பாதைகளிலும் போலீசார் சோதனை செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார், போலீசார் குழுவினர் நேற்று காலை முதல் திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
காலையில் மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற ரயிலில் பயணிகள் கொண்டு வந்த பொருட்களையும், ஸ்டேஷன்களை சுற்றி நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள், கார்களில் சோதனையிட்டனர்.
விருதுநகர் ஆற்றுப்பாலத்தில் இருந்து தென்காசி ஸ்டேஷன் நுழைவாயில் வரை உள்ள ரயில்வே வழித்தடங்களில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.