/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடங்கிப்போன ரயில்வே சுரங்கப்பாதை பணி
/
முடங்கிப்போன ரயில்வே சுரங்கப்பாதை பணி
ADDED : ஏப் 13, 2025 06:33 AM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் இணைப்பு சாலைக்கான இடம் வழங்குவதில்முடங்கியுள்ள ரயில்வே சுரங்க பாதை பிரச்னையை தீர்வு காண முயற்சி செய்யாத மக்கள் பிரதிநிதிகளால் மக்கள் 3 கி.மீ., சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சத்திரப்பட்டி ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே தரை வழியே இலகுரக வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டது. திட்ட வரைபடத்திற்கு ஒப்புதல், நில எடுப்பு, சுரங்கப்பாதை அமையும் இடம் அருகே குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளால் நீண்ட காலம் கிடப்பில் இருந்து வந்தது.
இந்நிலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக கான்கிரீட் பிளாக்குகள் பொருத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரும் நேரம் இணைப்பு சாலைக்கான இடம் கொடுப்பதில் நகராட்சி, ரயில்வே துறையிடையே சிக்கல் ஏற்பட்டு முடங்கியுள்ளது. இதனால் 3 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் மக்களுக்கு ஏற்படுவதுடன் தேவையற்ற போக்குவரத்து நெரிசலுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே நிர்வாகம் என ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறியாக இருந்து வரும் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் தலையிட்டு விரைவில் சுரங்கப்பைாதயை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

