/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணி
/
முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணி
ADDED : ஜூலை 12, 2025 04:52 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் முடிந்தும் நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறைகளின் ஈகோ பிரச்சனையால் ஆபத்தான முறையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் மறுபக்கத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது. விபரீதம்ஏற்படுவதற்கு முன் சிக்கலுக்கு வழி காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்டவாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல் சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ரோடு டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ். கே ரோடு இணைக்க திட்ட அறிக்கைக்கு பொதுப்பணித்துறை, நகராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்டவாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி பொருத்தியும், சுரங்கப்பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்தது.
இணைப்புக்காக டி.பி மில்ஸ் ரோட்டில் 6 மீட்டர்நிலம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பாதை திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதையாக உள்ளது. எனவே ரயில்வே துறை 4 மீட்டர் நிலம் வழங்க முன்வந்தால் நகராட்சி சார்பில் 2 மீட்டர் இடம் ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைப்பு ரோடு தாமதத்தால் சுரங்கப்பாதையை தற்காலிகமாக மண் போட்டு மூடி விட்டனர். செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சாலைக்கு போதிய இட வசதி இல்லை ரயில்வே நிர்வாகம் விட்டு தர வேண்டும் என நகராட்சியும் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம் தானே என நெடுஞ்சாலை துறையும் தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறுவதாக தெரியவில்லை.
இதனால் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம், ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்து அபாயம் போன்ற தேவையற்ற சிக்கல்களை தினமும் சந்தித்து வருகின்றனர்.
விரைந்து செயல்படுத்துங்க
சுப்புராஜ், தொழில் முனைவோர்: அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறியும், சுற்றிச் செல்லும்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பாலத்தின்அருகிலேயே டி.பி., மில்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைத்து தயாரான நிலையில் கடந்து காட்சி பொருளாக மாறிவிட்டது.
டி.பி மில்ஸ் ரோட்டில் இருந்து எதிரில் உள்ள பி.எஸ்.கே ரோட்டை அடைய 3 கி.மீ., தொலைவுள்ள மலையடிப்பட்டி ரயில்வே கேட்டிற்கும்,ஆனந்த் தியேட்டர் முன்பு தொடங்கும் மேம்பால பாதை வரையும்சுற்ற வேண்டியுள்ளது.விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ஒத்துழைப்பு வழங்குங்க
ராமகிருஷ்ணன், தலைவர்,ராஜபாளையம் ரயில் பயணங்கள் சங்கம்: மாணவர்கள், கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறு வாகனங்கள் தேவையின்றி மற்ற வாகனங்களோடு நெரிசலில் கடக்க வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும், நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது.
தேவையற்ற பிரச்சனைகளை பூதாகரமாக்கும் ஆளும் கட்சி பிரதிநிதிகளும், கூட்டணி கட்சியினரும் நகர் போக்குவரத்து நெரிசலுக்கு அத்தியாவசியமான சுரங்கப்பாதை பணிகளின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தீர்வு
ஆரம்ப கட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே, நகராட்சி துறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சாலைக்கு தேவையான இடம் ஒதுக்கீடு குறித்து எழுந்துள்ள தேவையற்ற தாமதத்தை மாவட்ட நிர்வாகம், மாவட்ட அமைச்சர்கள் கவனத்தில் எடுத்து தீர்வு காண முறைப்படியான நடவடிக்கை விரைந்து தொடங்க வேண்டும்.