/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீபாவளிக்கு 'பைனல் டச்' கொடுத்த மழை: பட்டாசு உற்பத்தி பாதிப்பு
/
தீபாவளிக்கு 'பைனல் டச்' கொடுத்த மழை: பட்டாசு உற்பத்தி பாதிப்பு
தீபாவளிக்கு 'பைனல் டச்' கொடுத்த மழை: பட்டாசு உற்பத்தி பாதிப்பு
தீபாவளிக்கு 'பைனல் டச்' கொடுத்த மழை: பட்டாசு உற்பத்தி பாதிப்பு
ADDED : அக் 27, 2024 01:52 AM
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீபாவளிக்கு, 'பைனல் டச்' கொடுத்த மழையால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பட்டாசு ஆலைகளை இரு நாட்கள் முன்னதாகவே மூட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. 2,500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
ஏற்கனவே பெய்த மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தி சதவீதம் குறைந்தது. தவிர மக்கள் விரும்புகின்ற வெரைட்டி பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வந்தது.
சிவகாசியில் தீபாவளிக்கு இரு நாட்கள் முன்வரை, பட்டாசு உற்பத்தி தொடர்ந்து நடக்கும். ஆனால், அவ்வப்போது பெய்யும் மழையால் உற்பத்தி பாதிக்கப்படுவதால், சில ஆலைகள் முன்னதாகவே உற்பத்தியை நிறுத்திக் கொண்டன.
இது குறித்து பட்டாசு ஏஜன்ட் ராஜேஷ் கூறியதாவது:
மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. தவிர உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால், மக்கள் விரும்புகின்ற வெரைட்டி பட்டாசுகள் தயாரிக்க முடியவில்லை.
மேலும் அதிகாரிகள் ஆய்வினால், 100க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் விட்டு விட்டு இப்பகுதியில் மழை பெய்கிறது.
இதனால், சில பட்டாசு ஆலைகள் உற்பத்தியை நிறுத்திக் கொண்டன. இதனால் பட்டாசு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
--- நமது நிருபர் -