நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்திய நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்ததால் குளிர்ச்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராஜபாளையம் சுற்று பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தது. மழைக்கான அறிகுறி தெரிந்தும் கடும் வெயில் பகலிலும் இரவு லேசான மேகமூட்டம் வந்து புழுக்கத்துடன் பொழுது கழிந்தது. தொடர்ந்து குறுகிய மின்தடைகளால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வந்தனர்.
கோடை வெயில் காரணமாக நீர் நிலைகள் தொடர்ந்து வற்றி வந்த நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வரை மின்னல், இடியுடன் பரவலாக மழை பெய்தது. குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.