ADDED : மே 17, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் நேற்று மாலை 5:30 மணிக்கு இடி சூறாவளியுடன் மிதமான மழை பெய்தது. சாத்துார், சடையம்பட்டி, சத்திரப்பட்டி, பெத்துரெட்டிபட்டி, வெங்கடாசலபுரம்கே.கே. நகர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சூறாவளிக்கு கே.கே.நகரில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மின்சார வாரியத் துறையினர் மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரியத்தினர் நகர் மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறிது நேரத்திற்கு மின் விநியோகத்தை நிறுத்தினர்.