/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பஸ்சிற்குள் மழை: குடை பிடித்து பயணம்
/
பஸ்சிற்குள் மழை: குடை பிடித்து பயணம்
ADDED : டிச 14, 2024 05:16 AM

நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பஸ்சில் சேதமான கூரையால் மழை நீரில் பயணிகள் நனைந்தும் குடை பிடித்தும் கடும் சிரமத்திற்கிடையே பயணம் செய்தனர்.
நரிக்குடி கிராமப்புற பகுதிகளுக்கு, அருப்புக்கோட்டை டெப்போவிலிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான பஸ்கள் கூரை, இருக்கைகள், படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளன. நேற்று காலை நரிக்குடி, இருஞ்சிறை வழியாக தேளி வரை இயக்கப்பட்ட டவுன் பஸ் சின் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகியது. இதனால் பயணிகள் நனைந்த படியே பயணம் செய்தனர். சிலர் பஸ்சில் குடை பிடித்தபடி கடும் சிரமத்திற்கிடையே பயணித்தனர்.
இதே போல் நேற்று காலை 12:15 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோவில், பாட்டக்குளம், விழுப்பனூர் வழியாக கூனம்பட்டி சென்று, பின்னர் அங்கிருந்து மல்லி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அரசு டவுன் பஸ்சில் கூரை ஒழுகியதால், அதில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.