/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடுகளின் ஓரங்களில் தேங்கியுள்ள மழை நீர்
/
ரோடுகளின் ஓரங்களில் தேங்கியுள்ள மழை நீர்
ADDED : மே 10, 2025 06:57 AM

சிவகாசி: சிவகாசியில் போக்குவரத்து நிறைந்த ரோட்டோரங்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசியில் திருத்தங்கல் ரோடு, பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த ரோட்டில் எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகிச் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. ரோடு குறுகலாக இருப்பதால் ரோட்டை விட்டு வாகனங்கள் கீழிறங்கி செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் மழை பெய்தால் ரோட்டில் இரு புறமும் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகின்றது.
இதில் வாகனங்கள் விலகிச் செல்லும் போது பதிந்து விடுகின்றது. தவிர சைக்கிள், டூவீலரில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழ வேண்டி உள்ளது. மேலும் பெரிய வாகனங்கள் செல்லும்போது தண்ணீர் அடிக்கப்பட்டு அருகில் உள்ள கடைகள், கடந்து செல்பவர்கள் மீது தெறிக்கிறது.
தவிர பள்ளங்கள் கொசு உற்பத்தி கேந்திரமாகவும் மாறிவிடுகின்றது. எனவே இப்பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதித்து பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.