/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்
/
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்
ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்
ADDED : நவ 26, 2025 03:25 AM

காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டி விருதுநகர் செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்க பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது
காரியாபட்டி சுற்று பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கண்மாய், குளம், குட்டைககளில் தண்ணீர் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கெப்பிலிங்கம்பட்டியிலிருந்து விருதுநகர் செல்லும் ரோட்டின் குறுக்கே ரயில்வே சுரங்க பாலம் உள்ளது.
கன மழைக்கு மழைநீர் தேங்கி குளம் போல் உள்ளது. இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் மிதந்து செல்லும் சூழ்நிலை உள்ளது. இதற்குப் பயந்து கொண்டு வில்லிபத்திரி வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்ல வேண்டி சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் கூடுதல் நேரம் செலவு ஏற் படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க, சுரங்கப் பாதையில் உள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

