/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் ரோடுகளால் திண்டாட்டம், சாயும் நிலையில் மின்கம்பங்கள் விருதுநகர் ரோசல்பட்டி ஜக்கதேவி நகர் குடியிருப்போர் குமுறல்
/
மண் ரோடுகளால் திண்டாட்டம், சாயும் நிலையில் மின்கம்பங்கள் விருதுநகர் ரோசல்பட்டி ஜக்கதேவி நகர் குடியிருப்போர் குமுறல்
மண் ரோடுகளால் திண்டாட்டம், சாயும் நிலையில் மின்கம்பங்கள் விருதுநகர் ரோசல்பட்டி ஜக்கதேவி நகர் குடியிருப்போர் குமுறல்
மண் ரோடுகளால் திண்டாட்டம், சாயும் நிலையில் மின்கம்பங்கள் விருதுநகர் ரோசல்பட்டி ஜக்கதேவி நகர் குடியிருப்போர் குமுறல்
ADDED : நவ 26, 2025 03:26 AM

விருதுநகர்: மண் ரோடுகளால் அவசர மருத்துவ உதவிக்கு கூட வெளியே வர முடியாத நிலை, நடுரோட்டிலும், சாயும் நிலையும் உள்ள மின்கம்பங்களால் விபத்து அபாயம், உவர்ப்பு நீரால் அவதி, குப்பை வாங்க வராததால் சுகாதாரக்கேடு, திணறடிக்கும் வேகத்தடைகள் என விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி ஜக்கதேவி நகர் குடியிருப்போர் குமுறினர்.
விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் மல்லிக்கிட்டங்கி ரோடு பகுதியில் ஜக்கதேவி நகர் அமைந்துள்ளது.
இதன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எஸ்.சவுந்தரபாண்டியன், செயலாளர் வைத்தீஸ்வரி, பொருளாளர் தங்கவேல், நிர்வாகிகள் கே.விஜயக்குமார், எஸ்.விஜயக்குமார், திருப்பதிராஜன், ராஜகோபால் ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது: எங்கள் பகுதியில் ரோடு வசதி போதுமானதாக உள்ளது.
மல்லிக்கிட்டங்கி மெயின் ரோட்டில் ஆங்காங்கே பேட்ஜ் பணிகள் பார்த்துள்ளனர். இருப்பினும் மழைக்கு அவை சேதமாகி வாகன ஓட்டிகளை சிரமப்பட வைக்கின்றன.
இதை விட ஜக்கதேவி நகரின் குறுக்கு தெருக்களில் ரோடு வசதியே இல்லை. இதனால் மக்கள் அல்லாடுகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட உதவிக்கு வர முடியாது.
குடிநீரை விலைக்கு வாங்கினாலும் அதை வீட்டிற்கு கூட கொண்டு வர முடியாத அளவுக்கு மண் சகதியில் வாழும் அவலம் நீடிக்கிறது.
பாண்டியன் நகர் கூர்நோக்கு இல்லம் அருகேயும் சகதி ரோடு உள்ளது. வாறுகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வடியவும் வழியில்லை.
இதுவும் ரோடுகளில் நீண்ட நாட்கள் மழைநீர் தேங்க ஒரு காரணமாக உள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகிறோம்.
மின்கம்பங்கள் அனைத்தும் நடுரோட்டில் உள்ளன. பழைய வரைபடங்களின் படி உள்ள அவற்றை இடமாற்றி, புதிய வரைபடத்திற்கு ஏற்ப வைக்க வேண்டும். இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதே போல் மண்ணின் தன்மையால் பல மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மெயின் ரோட்டிலும், குறுக்குத் தெருவிலும் இதே நிலை உள்ளது.
ஜல் ஜீவன் குழாய்கள் போட்டாலும் குடிநீர் வினியோகம் இல்லை. விலைக்கு வாங்கி தான் குடிநீர் குடிக்கிறோம்.
15 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீரும் உவர்ப்பாக உள்ளதால் சிறுநீரக கல் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.
25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி செயல்படாமலே உள்ளது. இதை செயல்படுத்தினால் குடிநீர் பற்றாக்குறை தீரும். ரோடுகள் சேறும் சகதியுமாய் இருப்பதை காரணம் காட்டி வீடு தோறும் குப்பை சேகரிக்க வருவது இல்லை.
இன்னொரு குறுக்குத்தெருவில் டிரான்ஸ்பார்மர் சாய்ந்துள்ளது மெயின் ரோட்டில் நுாறு மீட்டருக்குள் 13 வேகத்தடைகள் உள்ளன. முதுகுத்தண்டு பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகம் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்,என்றனர்.

