/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்து ஒரு மாதமே ஆன குடியிருப்பு சுவரில் ஈரப்பதம்
/
திறந்து ஒரு மாதமே ஆன குடியிருப்பு சுவரில் ஈரப்பதம்
திறந்து ஒரு மாதமே ஆன குடியிருப்பு சுவரில் ஈரப்பதம்
திறந்து ஒரு மாதமே ஆன குடியிருப்பு சுவரில் ஈரப்பதம்
ADDED : நவ 26, 2025 03:27 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே குல்லுார் சந்தையில் இலங்கை அகதிகளுக்கு கட்டித் தரப்பட்டு அக். 6ல் திறக்கப்பட்டரூ.15.86கோடி மதிப்பிலான 244குடியிருப்புகளின் சுவர்களில்பக்கவாட்டில் மழையால் ஈரப்பதம் ஏறி காணப் படுகிறது.
விருதுநகர் அருகேகுல்லுாசந்தை, மல்லாங்கிணர், வெம்பக்கோட்டை கண்டியாபுரம் ஆகிய இடங்களில் இலங்கை அதிகளுக்கு ரூ.27.41 கோடிக்கு கட்டப்பட்டுள்ள 408 குடியிருப்புகளை அக்.6ல் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இவ்வாறு திறக்கப்பட்ட குல்லுார்சந்தையில் ரூ.15.86 கோடியில் 244 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.முதற்கட்டமாக இங்கு 70 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் தற்போது 2ம் கட்டமாக 244 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மாவட்டம் முழுவதும்மொத்தம் 451 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகள் கட்டும் போதே தரமின்றி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் செப். மாதம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
மனுவை அடிப்படையாக கொண்டு மாவட்ட நிர்வாகமோ, இலங்கை அகதிகள் முகாம் தாசில்தாரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது கனமழை பெய்து வரும் சூழலில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறந்து ஒரு மாதங்களே ஆன இந்த வீடுகளில் ஈரப்பதம் ஏறி உள்ளது. வழக்கமாக எந்த புதிய கட்டடமாக இருந்தாலும் இத்தனை விரைவில் ஈரப்பதம் ஏறாது. எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில வீடுகளின் பக்கவாட்டு சுவர்களின் பூச்சுக்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றன. ஓராண்டுக்கு முன்ஆனைக்குட்டத்தில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளின் நிலையும் இது தான்.
இது குறித்து கட்டட பொறியாளர் ஒருவர் கூறுகையில், அரசு கட்டடங்களில் பொதுவாக மழைநீர் வடியும் வசதியை போதிய அளவில் செய்வதில்லை. கூரையில் மழைநீர் தேங்கி இருந்தாலும் இது போன்று ஈரப்பதம் சுவர்களில் ஏறும். அதே போல் கட்டட பணியின் போது கட்டுமானத்தில் சரியாக தண்ணீர் ஊற்றாமல் இருந்தாலும், குறைந்த தரமுடைய சிமென்ட் கலவை போட்டிருந்தாலும் சுவரில் ஈரப் பதம் ஏறும், என்றார்.

