/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகளை சுற்றி ஒரு மாதமாக தேங்கும் மழை நீர்
/
வீடுகளை சுற்றி ஒரு மாதமாக தேங்கும் மழை நீர்
ADDED : பிப் 04, 2024 04:15 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி 26 வது வார்டு ஆயில் மில் காலனியில் வீடுகளைச் சுற்றி ஒரு மாதமாக தேங்கியுள்ள மழை நீரால் குடியிருப்புவாசிகள் அவதியில் உள்ளனர்.
சிவகாசி மாநகராட்சி 26வது வார்டு ஆயில் மில் காலனியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிடங்கு உள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் அனைத்தும் கிடங்கில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் கிடங்கு நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் இப்பகுதி குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டனர். பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் ஒரு மாதமாக வெளியேறாத தண்ணீர் கழிவுநீராக மாறி பாசி படர்ந்து தற்போது வரையிலும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மக்கள் இதனை கடந்து தான் வீட்டுக்குள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரத் கேடும் ஏற்படுவதால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர். எனவே கிடங்கில் உள்ள தண்ணீரை வெளியேற்றி நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.