/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டூவீலர் பார்க்கிங் ஏரியாவாக மாறிய- ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட்
/
டூவீலர் பார்க்கிங் ஏரியாவாக மாறிய- ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட்
டூவீலர் பார்க்கிங் ஏரியாவாக மாறிய- ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட்
டூவீலர் பார்க்கிங் ஏரியாவாக மாறிய- ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட்
ADDED : மார் 06, 2024 05:36 AM

ராஜபாளையம், : ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் மக்கள் காத்திருக்கும் பகுதி கட்டணம் இல்லா வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளதால் பயணிகள் பாதித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகத்தில் நடைபாதை இருக்கைகள் காத்திருப்பு பகுதி முழுவதும் டூவீலர்கள் நிறுத்துமிடமாக மாற்றியுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கணேஷ்: புது பஸ் ஸ்டாண்ட் வளாகம் அருகிலேயே வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. தினமும் வெளியூர் சென்று வரும் அரசு ஊழியர்கள், போலீசார், போக்குவரத்து துறை, மின்வாரியத்தினர் கட்டணம் செலுத்த தயங்கி பயணியர் காத்திருக்கும் பகுதியை வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றி வைத்துள்ளனர். அரசு ஊழியர்களைக் கண்டு மற்றவர்களும் இதையே பின்பற்றுகின்றனர். இதனால் பயணியர் மழையிலும் வெயிலிலும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டும் நிறுத்த அறிவுறுத்துவதுடன் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.