/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சமூக விரோதிகளின் கூடாரமாகும் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் --போலீசாரின் ரோந்து எதிர்பார்ப்பு

ADDED : டிச 14, 2025 05:25 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவது உடன் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறுவதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ராஜபாளையம் சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. ஏற்கனவே இருந்த பழைய பஸ் ஸ்டாண்ட் இட ெநருக்கடி காரணமாக விரிவு படுத்தும் முயற்சியாக அமைக்கப்பட்ட இதில் பல்வேறு வசதிகளுடன் மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் முழுமையான செயல்பாடு உள்ளதாக பெயர் பெற்றது.
24 மணி நேரமும் பஸ்கள் வந்து செல்லும் இங்கு தினசரி 400-க்கும் அதிகமான டிரிப்கள் சர்வீசில் உள்ளன. மாவட்ட தலைநகரங்கள், வெளி மாநிலங்கள் செல்ல என பல்வேறு வகையான பயணிகள் பஸ் ஸ்டாண்டை நாடும் நிலையில் பயணிகளுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்ட போலீஸ் அவுட் போஸ்ட் குற்ற வாளிகளை விசாரிக்கும் மையமாக மாறிவிட்டது. மற்ற நேரங்களில் பூட்டப்பட்டும், பகுதிநேர காவலுக்கு வரும் போலீசாரும் முழுமையான ரோந்து செல்வதில்லை.
இதனால் இங்குள்ள இருக்கைகளில் சுற்றுப்பகுதியில் உள்ள புரோக்கர்கள், குடிமகன்கள், பிச்சைக்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இரவு நேரங்களில் பெண் பயணிகள் துணையின்றி இங்கு செல்வதில் கடினமான சூழல் ஏற்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீஸ் அவுட் போஸ்ட்டை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து முறையான ரோந்து பணிகளுக்கு போலீசாரை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.