/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல வண்ணங்களில் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரம்
/
பல வண்ணங்களில் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரம்
பல வண்ணங்களில் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரம்
பல வண்ணங்களில் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் ராஜகோபுரம்
ADDED : டிச 14, 2025 02:44 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள ஆண்டாள் கோவில், 108 வைணவ தலங்களில் ஒன்று. இக்கோவிலின் ராஜகோபுரம், விமானங்கள், மாடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விரைவில் ஜொலிக்க உள்ளன.
இந்து சமய அறநிலைத்துறை சார்பில், தமிழகத்தில் திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், பழநி, ஸ்ரீவில்லிபுத்துார் உட்பட பல்வேறு கோவில்களில் பல லட்ச ரூபாய் மதிப்பில் இரவு நேரங்களில் பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலிலும் ராஜகோபுரம், தங்க விமானம், பெரிய பெருமாள் மூன்று அடுக்கு விமானம், மாதவி பந்தல், கோவில் மாடங்கள் உட்பட பல்வேறு இடங்களை பல வண்ணங்களில் ஒளிரும் வகையில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணி, 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.
தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது, மின்விளக்குகளை ஒளிரச் செய்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது பார்ப்பவர்களை பிரமிக்க செய்தது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிந்து மின்விளக்கு அலங்காரத்தில் கோவில் கோபுரங்கள், விமானங்கள் மாடங்கள் ஜொலிக்க உள்ளன. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

