/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் தென்காசி சாலை இணைப்பு ரோடு பணிகள் ---விறுவிறு தடையற்ற பாசன வசதிக்கு விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூன் 26, 2025 12:48 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் தென்காசி சாலை இணைப்பு ரோடுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரோட்டின் இரு பக்கமும் உள்ள சாகுபடி நிலத்திற்கு தண்ணீர் தடையின்றி செல்ல வழி காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கொல்லம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பு ரோடு இல்லாததால் மெயின் ரோடு, நகர் பகுதி என அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது.
இந்நிலையில் இணைப்புக்கான அறிவிப்பு 2023-ல் வெளியிடப்பட்டது. இதற்காக பெரியாதி குளம், கடம்பன் குளம் பாசன விவசாய பகுதிகளில் 100 அடி அகலத்தில் 2.10 கி.மீ., தொலைவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு பிப். 8ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பணி துவங்கிய நிலையில், கிழக்கு பகுதியான தென்காசி ரோடு வழியாக சாலை பணி தொடங்காமல் இருந்தது. மண் பாஸ் அனுமதி தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக விவசாய நிலங்களில் மண் கொட்டப்பட்டு பச்ச மடம் சுடுகாடு வரை சமப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.
இந்நிலையில் சாலையின் இரண்டு பக்கமும் உள்ள விவசாய நிலங்களுக்கான நீர் பாசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து விவசாயி கண்ணன் கூறுகையில் முழுவதும் விவசாய நிலங்கள் வழியே செல்லும் இப்பாதைக்கு 18 குறு பாலம், 1 சிறு பாலம் அமைக்க உள்ளதாக கூறுகின்றனர். மண் கொட்டப்பட்டு குறைந்தது 5 அடி உயரத்தில் அமைய உள்ள சாலையால் மறுபக்கம் உள்ள பாசன பகுதிக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பணிகளின் போதே தேவையான இடங்களில் குழாய்களை அமைத்து தடையற்ற பாசனத்திற்கு வழி காண வேண்டும் என்றார்.