/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்
/
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்
பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட்
ADDED : மே 09, 2025 01:21 AM
ராஜபாளையம்: பணிகள் முடிந்தும் மின் மயானம், பழைய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படாமல் உள்ளது, என ராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
நகராட்சி கூட்டம் கமிஷனர் நாகராஜ் தலைமையில் நடந்தது. தலைவர் பவித்ரா முன்னிலை வகித்தார். அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ஏ.டி.சங்கர் கணேஷ், (காங்.,): துாய்மை பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 8.24 கோடி வழங்கியும் முறையாக பணி நடைபெறுவதில்லை. விடுப்பு எடுக்கும் ஊழியர்களை கணக்கிட்டு முறைப்படுத்த வேண்டும். மின் மயானம், பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் செடிகள் வளர்வதை தடுக்க பேவர் பிளாக் அமைக்க வேண்டும்.
பவித்ரா, தலைவர்: துாய்மை பணிகளில் குறைகள் சரி செய்யப்படும். முடிவடைந்துள்ள மின்மயானம், பழைய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞானவேல், தி.மு.க.,: தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. நகராட்சி சார்பில் நிதியை பெற்று அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பிரித்து வழங்க வேண்டும்.
சோலைமலை, அ.தி.மு.க.,: மேடான பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை குறைபாட்டை சரி செய்ய வேண்டும். மேம்போக்கு தீர்வை விதிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்கள் மின் இணைப்பு பெற முடியவில்லை.
நாகராஜன், கமிஷனர்: கடந்த காலங்களில் இத்தீர்வை போடப்பட்டு வந்தது. ரூ.150 க்கு கீழ் உள்ள வரிகள் நீக்கப்பட்டபோது மேம்போக்கு தீர்வையும் நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாய்மொழியாக உத்தரவு அளிப்பதாக கூறியுள்ளனர். அதன் பின் மேம்போக்கு தீர்வை போடப்படும்.
ஜெயசுதா, தி.மு.க.,: எனது வார்டில் அங்கன்வாடி மையம் இரண்டு ஆண்டுகளாக பூட்டப்பட்டு இதில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது.
கூட்டத்தில் 111 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.