/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உலக காவல் துறை தடகளம்; ராஜபாளையம் எஸ்.ஐ.,முதலிடம்
/
உலக காவல் துறை தடகளம்; ராஜபாளையம் எஸ்.ஐ.,முதலிடம்
ADDED : ஜூலை 02, 2025 06:32 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : அமெரிக்காவில் நடந்த உலக காவல்துறையினருக்கான தடகளத்தில் 5 ஆயிரம் மீட்டர் ரேஸ்வாக் போட்டியில் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு இலக்கு காவல் படை எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி 55, முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
சிவகங்கைமாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு இலக்கு காவல் படையில் எஸ்.ஐ., ஆக உள்ளார்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக வேக நடை , பல்வேறு தடகளப் போட்டியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலும் நடந்த போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் அலபாமா பெர்மிங்காமில் நடந்த உலக காவல்துறையினருக்கான தடகளத்தில் 5 ஆயிரம் மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் 30.14 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவருக்கு தமிழக போலீஸ் துறை உயரதிகாரிகள், போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.