/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி போலி லேபிள் தயாரித்த ராஜஸ்தான் வியாபாரி கைது
/
தீப்பெட்டி போலி லேபிள் தயாரித்த ராஜஸ்தான் வியாபாரி கைது
தீப்பெட்டி போலி லேபிள் தயாரித்த ராஜஸ்தான் வியாபாரி கைது
தீப்பெட்டி போலி லேபிள் தயாரித்த ராஜஸ்தான் வியாபாரி கைது
ADDED : ஏப் 20, 2025 03:23 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தீப்பெட்டி நிறுவனத்தின் லேபிளை போலியாக அச்சிட்டு தீப்பெட்டி தயாரித்து விற்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குப்தாவை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி சுந்தரவேல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் '27 நம்பர்' என்ற பெயரில் தீப்பெட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயரில் போலி தீப்பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் அந்நிறுவனத்தினர் புகார் செய்தனர்.
டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையை நிர்வாகம் செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குப்தா, சுந்தரவேல் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் போலி லேபிள் அச்சிட்டு தீப்பெட்டி தயார் செய்து ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் விற்பனை செய்தது தெரிய வந்தது. சஞ்சீவ் குப்தாவை கைது செய்த போலீசார், 342 தீப்பெட்டி பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

