/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை, தூர்வாரப்படாத ஓடை; அவதியில் விருதுநகர் செங்கோட்டை ஊராட்சி மக்கள்
/
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை, தூர்வாரப்படாத ஓடை; அவதியில் விருதுநகர் செங்கோட்டை ஊராட்சி மக்கள்
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை, தூர்வாரப்படாத ஓடை; அவதியில் விருதுநகர் செங்கோட்டை ஊராட்சி மக்கள்
வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை, தூர்வாரப்படாத ஓடை; அவதியில் விருதுநகர் செங்கோட்டை ஊராட்சி மக்கள்
ADDED : ஜன 30, 2024 07:17 AM

விருதுநகர் : விருதுநகர் ஒன்றியம் செங்கோட்டை ஊராட்சி கிராமங்களில் ரேஷன் கடை, ரோடு, குடிநீர் கிணறு, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் செங்கோட்டை, சின்னப்பரெட்டியப்பட்டி, சமத்துவபுரம், சொக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. செங்கோட்டை பகுதிக்கு வருவதற்கான பேவர் பிளாக் கற்கள் ரோடு எல்லிங்கநாயக்கன்பட்டி முதல் கோப்பநாயக்கன்பட்டி வரை அமைத்தனர். இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்வது அதிகரித்ததால் ரோடு முழுவதும் பள்ளங்கள் உருவாகி வாகனங்கள் செல்வதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டடம் கட்டுவதற்கு பல முறை எம்.எல்.ஏ., நிதியில் நிதி கேட்டும் ஒதுக்கப்படாததால் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. சின்னப்பரெட்டியப்பட்டியில் உள்ள ரேஷன் கடை அலுவலகமும் சேதமான நிலையில் உள்ளதால் மழை பெய்தால் நீர் ஒழுகும் நிலையில் உள்ளதால் பொருட்கள் நனைந்து பாதிக்கப்படுகிறது.
வலையங்குளம் கண்மாயில் இருந்து எல்லிங்கநாயக்கன்பட்டி கண்மாய்க்கு நீர் செல்லும் கால்வாய் சரியாக துார்வாராததால் மண்மேவி நிறைந்து உள்ளது. இந்த கால்வாயில் வீடுகளில் இருந்தும் வெளியேற்றும் கழிவு நீரும் செல்கிறது. மண் நிறைந்துள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துார்நாற்றம் வீசுகிறது. செங்கோட்டை பகுதியில் குடிநீர் வழங்கக்கூடிய நான்கு கிணற்றை துார்வாரி வீடுகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் கலையரங்கம் சேதமான நிலையில் உள்ளது. சின்னப்பரெட்டியப்பட்டி பகுதியில் இரண்டு தெருக்களில் ரோடுகள் இல்லை. இதனால் மழைக்காலங்களில் இவ்வழியாக செல்வதற்கே சிரமப்படவேண்டியுள்ளது.
சமத்துவபுரம் பகுதியில் வாறுகால் அமைக்கப்பட்டு கழிவு நீர் செல்ல வழிதடங்கள் மட்டும் உள்ளது. ஆனால் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் வடிந்து செல்ல ஏதுவாக வாறுகால்கள் இல்லை. மழைக்காலங்களில் வீட்டின் அருகே இருக்கக்கூடிய காலிஇடங்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. இங்கு படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது.