/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விதி மீறி பட்டாசு தயாரித்த 9 ஆலைகளுக்கு தற்காலிக உரிமம் ரத்து செய்ய பரிந்துரை

ADDED : மார் 20, 2024 12:11 AM
சிவகாசி : மாவட்டத்தில் விதியை மீறி செயல்பட்ட 9 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு தனி தாசில்தார் திருப்பதி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, பட்டாசு ஆலைகளில் விபத்தினை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். கங்கரக்கோட்டை ஜெயச்சந்திரனுக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மரத்தடியில் வைத்து பட்டாசு தயாரிக்கப்பட்டது. இதேபோல் வாடி, சிறுவள்ளியூர் வட்டம் சண்முகசுந்தராபுரம் எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 8 ஆலைகளில் சட்ட விரோதமாக மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு பணி நடந்தது. இந்த ஆலைகளுக்கு தற்காலிக உரிமம் ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என்றார்.
இதேபோல் சிவகாசி மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சேவுகனுக்கு சொந்தமான வேல் பட்டாசு ஆலை அனுப்பன்குளத்தில் உள்ளது. இங்கிருந்து மருந்து வினியோகம் செய்யப்பட்டு அனுமதி இன்றி அருகில் உள்ள இடத்தில் பட்டாசு தயாரிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பட்டாசு ஆலைக்கு தற்காலிக உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.