/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு
/
நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு
நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு
நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர் கிணற்றில் சடலமாக மீட்பு
ADDED : பிப் 11, 2025 07:46 AM
விருதுநகர், : விருதுநகர் சாமியார் நாகப்பன் தெருவைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரின் தம்பி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வசிக்கிறார். இவர்களின் தந்தை ராஜரத்தினம்78, திண்டிவனத்தில் மகன் வீட்டில் வசித்து வந்தார்.
உமா மகேஸ்வரியின் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் பிப். 1ல் அருப்புக்கோட்டையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜரத்தினம் வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து பின் இரவு 10:30 மணியில் இருந்து இவரைகாணவில்லை. நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு பெரிய வள்ளிகுளம் அருகே கிணற்றில் ராஜரத்தினம் உடல் மீட்கப்பட்டது.
வழிமாறி சென்றவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.