/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆக்கிரமிப்பு நிலங்கள் நீர் வரத்து பாதைகள் மீட்பு : வத்திராயிருப்பு வருவாய்த்துறை சுறுசுறுப்பு

ADDED : நவ 05, 2025 12:36 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகாவில் தாணிப்பாறை மலை அடிவாரம், மாவூற்று கண்மாய் நீர்வரத்து ஓடைகளில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளை வத்திராயிருப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு கையகப்படுத்தி வருவது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வரும் நிலையில் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 14 ஏக்கர் நிலத்தை வத்திராயிருப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு அங்கு பார்க்கிங் அமைத்தனர். இது சதுரகிரி பக்தர்களுக்கு பேருதவியாக இருந்தது.
அதேபோல் மாவூற்று மலையடி வாரத்தில் இருந்து வண்ணான் குளம் கண்மாய் வழியாக கடை பிள்ளையார்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர்வரத்து ஓடையில் இருந்த ஆக்கிரமிப்பையும் தற்போது வருவாய்த் துறையினர் மீட்டு உள்ளனர். இதன் மூலம் விவசாய நிலங்கள் பயனடையும்.
இது போன்ற ஆக்கிரப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எவ்வித தயக்கமின்றி உத்தரவிடுவதால் வருவாய்த்துறையினர் நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்புகளை மீட்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இது போல் வத்திராயிருப்பு தாலுகாவில் மலை அடிவாரத்தில் இருந்து கண் மாய்களுக்கு செல்லும் நீர் வளர்த்துப் பாதையிலும், அர்ஜுனா நதி நீர்வரத்து பாதையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.