/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகள்: விபத்து அச்சத்தில் மக்கள்

ADDED : நவ 05, 2025 12:36 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ரோட்டோர ஆக்கிரமிப்புகளால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கிருஷ்ணன் கோவிலை சுற்றி பாட்டக்குளம், விழுப்பனூர், குன்னூர், வலையபட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது.
மேலும் சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.
இதனால் இங்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வேணுகோபால் கோயில் பாலத்தில் இருந்து குன்னூர் பிரிவு ரோட்டின் இருபுறமும், அவுட் போலீஸ் ஸ்டேஷன் வளைவு பகுதிகளிலும், வத்திராயிருப்பு, குன்னூர் செல்லும் ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.
டூவீலர்கள் முதல் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களும் நிறுத்தப்படுவதால் எப்போதுமே போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் காணப்படுகிறது.
ரோட்டை கடந்து செல்ல முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றி சென்டர் மீடியன் அமைத்து விபத்து ஏற்படாத நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.