
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யா நகர் அரசு பள்ளியில் சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி நடந்தது.
மீட்புப் பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர். நீரின் மூழ்கினால் உடனடியாக தப்பிப்பதற்கான வழிமுறைகளும் காப்பாற்றுவதற்கான வழிகளையும் செய்து காண்பித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், பருவமழையை எதிர்கொள்ளுதல் குறித்தும் மீட்பு பணி குறித்தும் விளக்கினார். தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.