நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார ஜமாத் உலமா சபை, வட்டார முஸ்லிம் ஜமாத், மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் வத்திராயிருப்பில் சமய நல்லிணக்க விழா நடந்தது.
உலமா சபை தலைவர் காஜா முகைதீன் தலைமை வகித்தார். டாக்டர் பால்ச்சாமி முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், உலமா சபை மாநில துணை பொதுச் செயலாளர் இலியாஸ் ரியாஜி, கிறித்தவ பங்கு தந்தை இளங்கோ, தென்காசி எம்.பி.,ராணி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, வழக்கறிஞர் அன்னக்கொடி, பக்த சபை தலைவர் சுந்தர்ராஜ பெருமாள் பேசினர். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

