/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : பிப் 14, 2025 06:31 AM

சிவகாசி: சிவகாசியில் மாநகராட்சி சார்பில் ரத வீதிகள், மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சிவகாசி கோயில்களின் நான்கு ரத வீதிகள், மாடவீதிகளில் தள்ளுவண்டி கடைகள் உள்பட பல்வேறு கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இதனால் கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் டூவீலர்களே சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர திட்டமிடுநர் மதியழகன், நகர அமைப்பு ஆய்வாளர் சுந்தரவள்ளி, மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் நான்கு ரத வீதிகளிலும் மாட வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஒரு சில கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் உதவியுடன் மணல் அள்ளும் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இப்பகுதியில் அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றினாலும் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்கதையாகவே உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் பார்க்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.