ADDED : ஏப் 17, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி ரோடுகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகளை நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் ஊழியர்கள் நேற்று அகற்றினர்.
நேற்று காலை 8:00 மணிக்கு மதுரை ரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து ராமகிருஷ்ணாபுரம், சின்ன கடை வீதி, ரத வீதி, சிவகாசி ரோடு, மடவார்வளாகம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றினர்.
டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.