ADDED : ஏப் 22, 2025 05:29 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் 7 கொடிக்கம்பங்கள், 3 பீடங்கள் அகற்றப்பட்டன.
உயர்நீதிமன்ற உத்தரவு படி நேற்று விருதுநகர் நகராட்சி நிர்வாகம், போலீஸ் துறை சார்பில் ரோட்டோரத்தில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது. நகராட்சி கமிஷனர் சுகந்தி, நகரமைப்பு ஆய்வாளர் ரூபா தலைமை வகித்தனர். தெப்பம், செந்திவிநாயகபுரம் தெரு, நகராட்சி அலுவலகம் ரோடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., கம்யூ. கொடிக்கம்பங்களை அகற்றினர். 7 கொடிக்கம்பங்கள், 3 பீடங்கள் அகற்றப்பட்டன. இன்றும் பணிகள் தொடர்கிறது. மேற்கு, பஜார் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
* சிவகாசி மாநகராட்சியில் ஏற்கனவே இரு நாட்களாக பொது இடங்களில் இருந்த 70 கொடி கம்பங்கள் 49 கோடி மேடைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று 3 வது நாளாக திருத்தங்கல் பகுதியில் பொது இடங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் இடித்து அகற்றப்பட்டது.