/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்
/
சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்
சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்
சிவகாசியில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் அகற்றம்
ADDED : ஜூலை 12, 2025 11:55 PM

சிவகாசி:சிவகாசி பஸ் ஸ்டாண்டில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் அரசு, தனியார் பஸ்களில் வைக்கப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டது.
சிவகாசி பகுதியில் உள்ள அரசு, தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் வைக்கப்பட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் வேலுமணி, ஆய்வாளர் ஜாஸ்மின் மெர்ஸி கமலா தலைமையில் அதிகாரிகள் வாகனங்களில் இதுகுறித்து சோதனை செய்தனர். ஆய்வில் 9 பஸ்களில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் அகற்றப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் இயங்கிய மினி பஸ்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள் வைக்கப்பட்டிருந்தால் உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றி விட வேண்டும். சோதனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். அனுமதி இன்றி இயங்கிய மினி பஸ்களுக்கு கலெக்டரின் உத்தரவின் படி அபராதம் விதிக்கப்படும் என்றனர்.